நண்பர்கள் அற்றவர்களின் நண்பன்

நண்பர்கள் அற்றவர்களின் நண்பன் (மாற்கு 1:9-11)

ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கினை பற்றி நான்கு நற்செய்திகளும் பேசுகின்றன. எனினும் முதன்முறையாக இந்நிகழ்வை பற்றி மாற்கு நற்செய்தியாளனே தனது நற்செய்தியில் குறிப்பிட்டு இருக்கவேண்டும். யூதர்களின் முறைமையின்படி பாவமன்னிப்பிற்காக பலிசெலுத்தும் சடங்கு முறை காணப்பட்டது. இம்முறை செல்வந்தர்களிற்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் ஓர் பொழுது போக்கு முறையாகவும் காணப்பட்டு இருந்தது. இதற்கு மாற்று கலாசார மாதிரியை யோர்தான் நதியில் யோவான் ஸ்நானகன் உருவாக்கினார். பாவமன்னிப்பிற்கு என நியமிக்கப்பட்ட இத்திருமுழுக்கு ஏழைகளுக்கான ஓர் வரப்பிரசாதமாக காணப்பட்டது. ஆண்டவர் இயேசு அதிகார வர்க்கத்தின் பாவமன்னிப்பு சடங்கை நிராகரித்து ஏழைகளின் சடங்கோடு தன்னை இணைத்துக் கொள்கின்றார்.

நண்பர்கள் அற்றவர்களின் நண்பன்

திருமுழுக்கு சடங்கு இயேசுவின் தனித்துவத்தையும் அடையாத்தையும் உணரவைத்த ஓர் நிகழ்வாகும். திருமுழுக்குக்கின் போது ஆண்டவர் இயேசு தனது குமாரத்துவத்தையும் மேசியத்துவத்தையும் உணர்ந்ததோடு பிறருக்காக தான் துன்பப்பட வேண்டும் என்கின்ற உண்மையையும் உணர்ந்துக் கொண்டார். (திரு. பாடல்-சங்கீதம் 2:7) குறிப்பிட்ட பணிக்காக கடவுளால் தெரிந்துக் கொள்ளப்பட்டதாகவும் தத்தெடுக்கப்பட்டதாகவும் இயேசு உணர்ந்தார். (2 கொரி 5:21) திருப்பணியில் தேவையை தன்மையை உணர்ந்து கொள்வதற்கு மக்களுடன் அடையாளப்பட வேண்டியதன் அவசியத்தை திருமுழுக்கு உணரவைத்தது. திருமுழுக்கில் விண்ணும் மண்ணும் இணைகின்றது. இவ் இணைப்பு வானம் திறக்கப்படுதலின் ஊடாக வெளிப்படுகின்றது. இதன் மத்தியில் இயேசு கடவுளின் மகன் என வெளிப்படுத்தப்படுகின்றார். இதனை மாற்கு 1:1, 15:39 இவ் இரண்டு வாக்கியங்களும் இயேசுவின் தெய்வீகத்தன்மையை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இதன் ஒளியில் ஆண்டவர் இயேசு திருமுழுக்கின் போது பிதாவினால் பிறரின் நன்மைக்காகவும் எவ்வாறு துன்பப்பட வேண்டும் என எண்ணினாரே அதே பணியியை சிலுவையிலே நிறைவு செய்தார். எனவே திருமுழுக்கு என்பது கடவுளுடன் நாங்கள் செய்யும் பொருத்தனையை நிறைவு செய்யும் இடமாகும். அதாவது பிசாசையும் அதன் கிரியைகளையும் கைவிட்டு விட்டு சிலுவையை நோக்கிய பயணித்தல் பிரயாணிப்போம் என கடவுளுக்கு முன்பாகவும் நாம் செய்த உடன்படிக்கையின் தற்போதைய நிலை எவ்வாறு உள்ளது என ஆராய்ந்து பார்க்க இயேசுவின் திருமுழுக்கு எம்மை அழைக்கின்றது.

இயேசுவின் திருமுழுக்கிற்கு பின்னர் அவருக்கு கிடைக்கும் பரிசு சோதனை ஆகும். இது ஆதித்திருச்சபையின் அனுபவ நிலையை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. ஆதித்திருச்சபையில் கிறிஸ்துவின் திருப்பெயரால் திருமுழுக்கு பெற்றவுடன் மக்கள் தங்கள் உயிர்களை இழக்கக்கூடிய அளவிற்கு சோதிக்கப்பட்டனர். இதன் ஒளியில் நாம் பெற்றுக் கொண்ட திருமுழுக்கு வெறுமனே சடங்காச்சாரத்தின் அனுபவமாகவும் ஆசீர்வாதமாவும் மாறி உள்ளதா? இல்லையேல் துன்புறும் அனுபவத்திற்கு ஊடாக எம்மை அழைத்து செல்கின்றதா? நம்மை கடவுளின் பிள்ளைகளாக பிறர் அடையாளம் கண்டு கொள்ளவேண்டுமேயாகில் நாம் பிறரின் நல்வாழ்விற்காக துன்பப்பட அழைக்கப்படுகின்றோம். அத்துன்பமே நாங்கள் கடவுளின் பிள்ளைகள் என்பதை எடுத்துக்காட்டும் உன்னத கருவியாகும். (மாற்கு 5:39)

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக